×

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் விபத்தில் 410 பேர் பலி

ராமநாதபுரம், ஜன.1: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2023ம் ஆண்டில் போலீஸ் வழக்குகள் குறித்து எஸ்.பி தங்கத்துரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் கொலை முயற்சி, வன்முறை மற்றும் காயங்கள் தொடர்பானவற்றில் 784 வழக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த 2022ம் ஆண்டை விட 7 சதவீதம் குறைவு. இதனை போன்று 37 கொலை வழக்குகள், கொடும் குற்ற வழக்குகள் 36 பதிவாகியுள்ளது. இது 2022ம் ஆண் டை விட குறைவு.

சொ த்து சம்மந்தமாக 507 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. சொத்து வழக்கில் 323 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் 1,294 வாகன விபத்துகளில் 1,231 பேர் காயம் அடைந்துள்ளனர். 410 பேர் பலியாகியுள்ளனர்.போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட டூவீலர்கள் மற்றும் நான்கு சக்கர வாகங்கள் மீது ரூ.2 லட்சத்து 27ஆயிரத்து 685 வழக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த 2022ம் ஆண்டை விட அதிகமாகும். கஞ்சா வழக்கில் 123 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.39 லட்சத்து 25 ஆயிரத்து 630 மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் தொடர்புடைய 119 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.

தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 359 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டு, ரூ.13 லட்சத்து 16ஆயிரத்து 588 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மணல் கடத்தலில் ஈடுபட்ட 197 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 16 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சைபர் கிரைம் பிரிவில் 33 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ரூ.4 கோடியே 63 லட்சத்து 80 ஆயிரத்து 141 முடக்கம் செய்யப்பட்டுள்ளது. பணம் இழந்தவர்களிடம் ரூ.20 லட்சத்து 47ஆயிரத்து 115 ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

The post ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் விபத்தில் 410 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram district ,Ramanathapuram ,SP ,Thangathurai ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’